டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை நிராகரிப்பு: டில்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
* 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.91.14 ஆக கடும் வீழ்ச்சி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப் படையில் எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படக்கூடாது’: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்வதற்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு. அசல் சட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பை “பலவீனப்படுத்தும்” என்று பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சிறப்புச் சுருக்கத் திருத்தத்துக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 15.2% தமிழ்நாடு வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு; சென்னையில் மூன்றில் ஒரு பங்கு குறைவு. எஸ்.அய்.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது.
தி ஹிந்து:
* களத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து கவலை தெரிவித்த சோனியா காந்தி, அவர்களின் மதிப் பூதியத்திற்கான ஒன்றிய அரசின் பங்களிப்பை இரட்டிப்பாக்கவும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் (ICDS) திட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட மூன்று லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பவும் ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.
– குடந்தை கருணா
