புதுடில்லி, டிச. 16- மோடிக்கு கல்லரை கட்டுவோம் என்று டில்லியில் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முழக்கமிட்டதாக கூறிய பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கான சான்றுகளை பாஜக தரப்பு தரவில்லை.
பேரணி
டில்லியில் வாக்குத்திருட்டு தொடர்பாக மாபெரும் பேரணி ஒன்றை காங்கிரஸ் கட்சி டில்லி ராம்லீலா திடலில் நடத்தியது. இந்த திடலில் பாஜகவின் வாக்குதிருட்டு பற்றி காங்கிரஸ் தலைவர்கள் பேசினார். இந்த பேரணிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருந்தது.
‘இந்த நிலையில் இந்தப் பேரணியில் யாரோ மோடிக்கு கல்லரை கட்டுவோம் என்று முழங்கியதாக கூறி பாஜக நாடாளு மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஜெ.பி. நட்டா, பிரதமர் மோடிக்கு எதிரான முழக்கங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற முழக்கங்கள் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும் மனநிலையையும் காட்டுகிறது. ஒரு பிரதமருக்கு எதிராக இதுபோன்ற விசயங்களைக் கூறுவது கண்டிக்கத்தக்கது.
இதற்காக சோனியா காந்தி இந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மிகவும் கீழ்த்தரமான அரசியலை காங்கிரஸ் செய்து வருகிறது. இது எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.
இதுபற்றி காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சி.வேணு கோபால் கூறுகையில், “டில்லியில் நாங்கள் ஒரு வெற்றிகரமான பேரணியை நடத்தியதால் இன்று பாஜகவினர் உருவாக்கியுள்ள ஆதாரமற்ற நாடகம் இது.
எந்தவொரு காங்கிரஸ் தலைவராவது அப்படி ஏதாவது சொன்னாரா? என்று நான் அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் கேட்டேன்.
பேரணியில் இருந்த சிலர் அப்படிச் சொன்னதாக கூறினார். இது ஆதாரமற்றது. அரசியல் எதிரிகளாக இருந்தாலும் சரி, எந்தவொரு அரசியல் தலைவருக்கும் எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத முழக்கத்தைப் பயன்படுத்துவது எங்கள் வழக்கம் அல்ல.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசிய பேச்சை நாம் பார்த்தோம். மாநில அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ எந்தத் தலைவரும் இதுபோன்ற செயலைச் செய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
