ஜெய்ப்பூர், டிச.14 ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணும் 19 வயது ஆணும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும்படி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இவர்கள் இருவரும் திருமணம் புரியாமல் லிவ் – இன் டு கெதர் முறைப்படி சேர்ந்து வாழ்வதால்,பெண்வீட்டார் தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாக கோட்டா காவல்நிலையத்தில் அந்த இளைஞர் புகார் கொடுத்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையும் தன் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். திருமண வயதை எட்டாத இருவர் சேர்ந்து வாழ்வது தவறு என்கிற அரசுத் தரப்பு வாதத்தை நீதிபதி அனூப் தள்ளுபடி செய்தார். “18 வயதைக் கடந்த இருவர் சேர்ந்து வாழ்வது அரசமைப்புச் சட்டத்தின்படி அவர்களது தனியுரிமை. அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது மாநிலத்தின் கடமை” என நீதிபதி தீர்ப்பளித்தார்.
18 வயதை அடைந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
