புதிய தொழிலாளர் சட்டங்கள் விவகாரம் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உறுதி

புதுடில்லி,டிச.14 புதிய தொழிலாளர் நலச்சட்டங்கள் தொடர்பான தொழிற்சங்கத்தினரின் கவலைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதியளித்துள்ளார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஏற்ெகனவே நடைமுறையில் இருந்த 29 சட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சட்டங்கள், ‘கார்ப்பரேட் ஜங்கிள் ராஜ்’ எனப்படும் தனியாரின் ஆதிக்கத்தை ஊக்குவிப்பதாகக் கூறி, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

புதிய சட்டங்கள் முதலாளிகளுக்கு சாதகமாக வளைக்கப்படுவதாகவும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாது காப்பு கோரிக்கைகள் புறக்கணிக்கப் படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ‘ஜன சன்சத்’ பகுதியில் நேற்று (13.12.2025) சந்தித்துப் பேசினார். அப்போது, புதிய சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதாகவும், அமைப்பு களின் வலிமையை குறைப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘தொழிலாளர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளின் உரிமைகளைப் பலவீனப்படுத்தவும், அவர்களின் குரலை ஒடுக்கவும் இந்த புதிய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதிநிதிகள் வேதனை தெரிவித்தனர். அவர்களின் ஆலோசனைகளை நான் கவனமாகக் கேட்டறிந்தேன். தொழிலாளர்களின் கவலைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயமாகக் குரல் எழுப்புவேன்’ என்று உறுதியளித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *