புதுடில்லி, டிச. 12- பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில், சில நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் கருத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அந்த வகையில், தற்போது அலகாபாத் உயர் நீதிமன் றத்தின் ஒரு கருத்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
சர்ச்சைக் கருத்து
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பெண்ணின் ரவிக்கை ஜிப்பைத் திறந்து அவரது மார்பைப் பிடித்ததாகப் புகார் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியது மட்டு மல்லாமல், சர்ச்சைக்குரிய ஒரு கருத்தையும் பதிவு செய்தது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி, “ஒரு பெண்ணின் உள்ளா டையைக் கழற்றாமலோ அல்லது உடலுறவு கொள்ளாமலோ, அவரது மார்பைப் பிடிப்பது என்பது பாலியல் வன்கொடுமை என்ற வரையறைக்குள் வராது. இது பெண்ணின் மானபங்கப்படுத்துதல் என்ற குற்றத்தின் கீழ்தான் வரும்” என்று கருத்துத் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் இந்தக் கருத்து உடனடி யாகச் சட்ட வல்லுநர்கள் மற்றும் பெண்கள் அமைப் புகளிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது.
“உடலின் எந்தப் பாகத்தைத் தொட்டா லும் அது பாலியல் சீண்டல்தான். அதைத் தீவிரமற்ற குற்றமாகக் கருதுவது, குற்றவாளிகளுக்குத் தைரியத்தைக் கொடுக்கும்.”
“சமூகத்தில் இது போன்ற ஒரு தவறான முன்னுதாரணத்தை (Precedent) உருவாக்கிவிடும்” என்ற அச்சம் எழுந்தது.
உச்சநீதிமன்றம் தலையீடு
பம்பாய் உயர் நீதிமன்றத்தின் முன்பு சர்ச்சையான “தோலோடு தோல் படாமல் தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது” என்ற கருத்தைப் போன்றே, இந்தக் கருத்தும் பிற்போக்குத்தனமானது என விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்று உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்தியத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, “இதுபோன்ற கருத்துகள் மிகவும் தீவிரமானவை மற்றும் கவலைக்குரியவை” என்று குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரப் பிரதேச அரசுக் கும் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் அறிக்கை அனுப்ப உத்தர விட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்தக் கருத்து சட்டப்படி சரியா என்பது குறித்து விரிவான விசாரணையை உச்ச நீதிமன்றம் மேற்கொள்ளவுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு அரணாகச் சட்டம் இருக்க வேண்டிய சூழலில், “எப்படிக் தொட்டால் குற்றம்?” என்று நீதிமன்றங்களே விவாதிப்பது கவலை அளிப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இந்தச் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
