புதுடில்லி,டிச.12 முக்கியமற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரி முறையிடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார். 10.12.2025 அன்று வழக்கு விசாரணையின்போது, வழக்கை அவசரமாக விசா ரிக்கக் கோரி முறையிட்ட ஒரு வழக்குரைஞரிடம் தலைமை நீதிபதி பின்வருமாறு தெரி வித்தார்:
“முக்கியத்துவம் இல்லாத வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரி முறையிடுவது நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும். அபராதம் 50,000 (ஐம்பதாயிரம்) ரூபாய் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் வகையில் அறி விக்கை வெளியிடப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் அபராதத் தொகை இளம் வழக் குரைஞர்களுக்கான பயிற்சிக்கு பயன்படுத்தப்படும்” என்றார்.
