நாடாளுமன்றத்தில் எஸ்.அய்.ஆர். விவாதத்தின்போது நான் பேசியதைக் கேட்டு அமித்ஷா பயந்து விட்டார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ராகுல் காந்தி பேட்டி

டில்லி, டிச.12 நாடாளுமன்றத்தில் எஸ்அய்ஆர் விவாதத்தின்போது  நான் இடைமறித்து பேசியதில் அமித் ஷா பயந்துவிட்டார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் சிறப்பு தீவிரத் திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரு, இந்திரா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக உரையாற்றினார்.

இதனைத் அடுத்து, அமித் ஷாவின் பேச்சைப் புறக்கணித்து, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், நேற்று (11.12.2025) ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்றத்தில் நேற்று அமித்ஷா பதற்றத்துடன் இருந்தார்; அவரின் கைகள் நடுங்கின, நீங்கள் கண்டிருப்பீர்கள். அமித் ஷா நாடாளுமன்றத்தில் தவறான வார்த்தைகளை பிரயோகப் படுத்தினார்.

அமித் ஷா பெரும் மன அழுத்தத்தில் இருந்ததை நாடே பார்த்தது. எனது குற்றச்சாட்டுகளை மறுத்து அமித் ஷா பயந்துவிட்டார்  அதை மறுத்து அவர் பதிலோ, ஆதாரங்களோ வழங்கவில்லை. நாங்கள் வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குத் திருட்டு ஆதாரங்களை வெளியிட்டோம். அமித் ஷாவை நேரடி விவாதத்துக்கு அழைத்து சவால்கூட விட்டேன். நான் விடுத்த சவாலுக்கோ குற்றச்சாட்டுகளுக்கோ அமித்ஷாவிடம் எந்த பதிலும் இல்லை என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *