உணவு கிடையாது.. மகளைப் பார்க்க விடாமல் சித்ரவதை.. கருநாடகா ஆளுநரின் வீட்டில் நடக்கும் வரதட்சணைக் கொடுமை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களூர், டிச.4 கருநாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டின் பெயரன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் செய்துள்ளார். ரூ.50 லட்சம் வரதட்சணை பணம் கொண்டு வர வேண்டும் என்று கூறி உணவு வழங்காமலும், மகளை பார்க்க விடாமலும் தடுத்துள்ளனர். அதோடு, மொட்டை மாடியில் இருந்து அவரை கீழே தள்ளி கொல்ல முயன்றதாக பரபரப்பான புகார் வழங்கப்பட்டுள்ளது திடுக்கிட வைத்துள்ளது.

கருநாடகாவின் ஆளுநராக தாவர் சந்த் கெலாட் உள்ளார். இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவரது பெயரன் பெயர் தேவேந்திர கெலாட். இவரது மனைவி பெயர் திவ்யா கெலாட். இவர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நாக்டா என்ற இடத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2018 ஏப்ரல் 29ஆம் தேதி திருமணம் நடந்தது. ரட்லம் மாவட்டம் தால் என்ற இடத்தில் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில் தாவர்சந்த் கெலாட் ஒன்றிய அமைச்சராக இருந்தார்.

வரதட்சணை கொடுமை

இந்நிலையில் தான் திவ்யா கெலாட் தனது கணவர் தேவேந்திர கெலாட் மீது மத்தியப் பிரதேசத்தின் ரட்லம் காவல்துறை கண்காணிப்பாளர் அமித்குமாரிடம் புகாரளித்துள்ளார். அதில், ‘‘என் கணவர் தேவேந்திர கெலாட்டுக்கு இருக்கும் சில பழக்கங்களை மறைத்து என்னை திருமணம் செய்து வைத்துவிட்டனர். என் கணவருக்கு மதுபானம் உள்பட பிற போதைப்பழக்கம் உள்ளது. அதோடு இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார். இப்போது வரதட்சணை கேட்டு கொடுமை செய்கிறார்கள். என் தந்தை ரூ.50 லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்தார் என்று என்னிடம் அதனைக் கேட்டு துன்புறுத்துகின்றனர். வரதட்சணை பணமாக ரூ.50 லட்சம் கேட்கின்றனர்.

நான் மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். பலமுறை உணவு தராமல் துன்புறுத்தி உள்ளனர். மொட்டை மாடியில் இருந்து என்னை கீழே தள்ளி கொல்லவும் முயன்றார். கடந்த 2025 ஜனவரி 26ஆம் தேதி குடிபோதையில் இதனை செய்தார். நான் கேலரி ஏரியாவில் விழுந்து முதுகு, இடுப்பு, தோள்பட்டையில் பலத்த காயமடைந்தேன். இரவில் என்னை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லவில்லை. அதன்பிறகு இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு மறுநாள் காலையில் தான் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவ செலவை என் தந்தையை செலுத்தும்படி கூறினர்.

எனக்கு 4 வயதில் மகள் உள்ளார். அவளை என்னிடம் இருந்து பிரித்து விட்டனர். நவம்பர் மாதம் என் மகளை பார்க்க பள்ளிக்கு சென்றேன். அப்போது என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. என் தந்தையிடம் இருந்து பணம் வாங்கி வந்தால் மட்டும் தான் மகளை பார்க்க அனுமதிப்பதாக கூறி உள்ளனர்.

இதற்கு மாமனாரான, ஆலட் சட்டமன்ற தொகுதியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஜீதேந்திர கொலாட் மற்றும் குடும்பத்தினர் விஷால் கெலாட், அனிதா கெலாட் உள்ளிட்டவர்கள் உடந்தையாக இருக்கின்றனர்” என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்த இடம் உஜ்ஜைன் லிமிட்டுக்குள் வருகிறது. இதனால் உஜ்ஜைன் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உஜ்ஜைன் காவல்துறை தலைவரிடம் புகார் அளிக்க ரட்லம் காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை திவ்யா கெலாட்டின் மாமனார் ஜிதேந்திர கெலாட் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுபற்றி, ‘‘குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம். நான் மீடியாவிடம் உண்மையை பேசுவேன்” என்று கூறி சென்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *