புதுடில்லி, செப். 8 தலைநகர் டில்லியில், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சட்டவிரோதமாக தடையை மீறி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்ப வர்களை கைது செய்து, பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 1 முதல் 19-ஆம் தேதி வரையில் இந்த நடவடிக்கைகளின் மூலம் 13 ஆயிரத்து 700 கிலோ பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததாக கைப்பற்றப் பட்டு உள்ளன. இதுதொடர்பாக 75 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன. குறிப்பாக மடாங்கிரி சந்தை பகுதி யில் ஒரு விற்பனையாளரின் கடையில் மட்டும் சுமார் 1200 கிலோ பட்டாசு கடந்த திங்கட்கிழமை பறி முதல் செய்யப்பட்டது.