மும்பையை குஜராத்துடன் இணைக்க பா.ஜ.க. சதி மராட்டிய மக்களுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, நவ.28– மகாராட் டிராவின் ‘அய்அய்டி பாம்பே’யில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச் சியில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசிய கருத்துக்கு மகாராட்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

அய்அய்டி பாம்பே நிகழ்ச் சியில் பேசிய ஜிதேந்திர சிங், “கடவுளுக்கு நன்றி, அய்அய்டி பாம்பே இன்னும் அதே பெயரைக் கொண்டுள்ளது. நீங்கள் அதை அய்அய்டி மும்பை என்று மாற்ற வில்லை. அதேபோல், அய்அய்டி மெட்ராஸ் அதன் பெயரை மாற்றவில்லை, அது இன்னும் அய்அய்டி மெட்ராஸ் தான்” என்று கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ராஜ் தாக்கரே, “இப் போதுதான் அவர்களின் மன நிலை வெளிப்பட்டுள்ளது. அவர்கள் மும்பையை மகாராட்டிராவிலிருந்து பறிக்க விரும்புகிறார்கள். மும்பை மராத்தியர்களுக்குச் சொந்த மானது. எங்கள் மும்பை மராத்தியர்களிடம் இருக்கும்.

பல ஆண்டுகளாக சிலரின் ஆசை இப்போது வெளி வந்துள்ளது. ஜிதேந்திர சிங்குக்கு மும்பையுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இதைச் சொல்வதன் மூலம், அந்த கட்சியின் உயர் மட்ட கைதட்டலைப் பெறுவதே இதன் நோக்கம்.

மும்பை என்ற பெயரை அவர்கள் வெறுக்கிறார்கள், ஏனென்றால் அது மும்பா தெய்வத்தின் பெயர். அதுதான் இங்கே உண்மையான தெய்வம். மராத்தியர்கள் அந்த தெய்வத்தின் குழந்தைகள். அவர்கள் உங்களை வெறுக்கிறார்கள்.

பஞ்சாபிலிருந்து சண்டிகர் நகரைக் கைப்பற்ற அவர்கள் முயன்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து அதை எதிர்த்தபோது அது தோல்வி யடைந்தது. ஆனால் அது தற்காலிக மானது. மும்பையைப் போலவே அங்கேயும் ஒரு சதித்திட்டம் உள்ளது.

எங்களுக்கு மும்பை வேண் டாம், பம்பாயே வேண்டும் என்று கூறி நகரத்தைக் கைப்பற்ற அவர்கள் திரும்பி வருகிறார்கள். மும்பை பெருநகர நகரத்தை குஜராத்துடன் இணைப்பதே அவர்களின் திட்டம். எனவே, மராத்தி மக்கள் விழித்தெழுந்து செயல்பட வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *