அரூர், நவ. 28- அரூர் மாவட்டம், கடத்தூரில் டிசம்பர் 29ஆம் தேதி இதுதான் திராவிட மாடல் ஆட்சி, இதுதான் ஆர்.எஸ்.எஸ் -பாஜக ஆட்சி பரப்புரை பொதுக்கூட்டம், மற்றும் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
அரூர் மாவட்டக் கழக கலந்துரை யாடல் கூட்டம் மாவட்ட பகுத்தறி வாளர் துணைச் செயலாளர் தேக்கல் நாயக்கன்பட்டி ஆசிரியர் மு.பிரபாகரன் பண்ணை இல்லத்தில் 23.11.2025ஆம் தேதி 12:00 மணி அளவில் மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் மு.பிரபாகரன் வரவேற்புரையாற்றினார், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி கடவுள் மறுப்புக்கு கூறினார்.
மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் துணைத் தலைவர் பெ.அன்பழகன், மாவட்ட கழக துணைத் தலைவர் இரா.ஆனந்தன், ஒன்றிய கழக தலைவர் பெ. சிவலிங்கம், நகர கழகத் தலைவர் இரா. நெடுமிடல், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் சொ. பாண்டியன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வ.நடராஜன், ஆகியோர் முன்னிலையில் கூட்டத்தின் நோக்கத்தை பற்றி மாநில பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் அண்ணா சரவணன், மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.ராஜேந்திரன், ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இறுதியாக கூட்டத்தின் நோக்கத்தை பற்றியும், பெரியார் உலகத்திற்கான நன் கொடை திரட்டுதல், அரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கடத் தூரில் டிசம்பர் 29ஆம் தேதி இதுதான் திராவிட மாடல் ஆட்சி, இதுதான் ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆட்சி பரப்புரை பொதுக்கூட்டத்தை நடத்துவது தொடர்பாக திராவிடர் கழக தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
வருகிற டிசம்பர் இரண்டாம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாளை திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் கிராமங்கள் தோறும் இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.
வருகிற டிசம்பர் மாதம் 29ஆம் தேதி அரூர் கழக மாவட்டம் கடத்தூரில் இதுதான் திராவிடர் மாடல் ஆட்சி, இதுதான் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி மாடல் ஆட்சி என்னும் விளக்க பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற வருகை தரும் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பரப்புரைப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது,
திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு இரண்டாவது தவணையாக நிதி சேர்த்து தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்குவது, திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள், சார்பு நிலையில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களும் விடுதலை சந்தா சேர்த்து அளிப்பது, ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டில் உள்ள மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் எஸ்.அய்.ஆர் என்ற திட்டத்தைக் கொண்டு வந்து இருப்பதை மாவட்ட கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
நிதி வசூல் குழு, பெரியார் உலகம் மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான நிதி சேர்ப்புக் குழுவை அமைப்பதென தீர்மானிக்கப்படுகிறது.
மாவட்ட அளவில் நிதிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன், பாப்பிரெட்டிப்பட்டி குழு ஒருங்கிணைப்பாளர் மாரி. கருணாநிதி, தலைவர் கு.தங்கராஜ், செயலாளர் ராஜ வேங்கன், துணைத் தலைவர் பூங்குன்றன், துணைச் செயலாளர் திராவிடன், பொருளாளர் அய்யனார், குழு உறுப்பினர்கள் அன்பரசன் வெண்ணிலா, ராஜேஷ், சாய்குமார்,
கடத்தூர் குழு, தலைவர் அ. தமிழ்ச்செல்வன், செயலாளர் பெ. அன்பழகன், பொருளாளர் மு பிரபாகரன், குழு உறுப்பினர்கள் வெ.தனசேகரன், பாண்டியன், நடராஜன், பச்சையப்பன், தீ. சிவாஜி, அரூர் குழு ஒருங்கிணைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தலைவர் சா. ராஜேந்திரன், செயலாளர் பசுபதி, பொருளாளர் மணிமேகலை, குழு உறுப்பினர்கள் பெ.கல்பனா, உமா கவிஞர் பிரபாகரன், மு.பிரேம்குமார், ஆகியோர் செயல்படுவார்கள்.
பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முன்னாள் மாணவரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளருமான ஆசிரியர் மு. பிரபாகரன் ரேவதி குடும்பத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோர்
மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி தலைவர் மணிமேகலை, மகளிர் பாசறை தலைவர் பெ. கல்பனா, ஊடகவியலாளர் பாளை பசுபதி, ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் பச்சையப்பன், விடுதலை வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர் மு.பிரேம்குமார் கொண்டகரஅள்ளி, கிளைக் கழக தலைவர் பிரகாசம், மரு க்காளம்பட்டி கலா, மாவட்ட மாணவர் அணி பொறுப்பாளர் ராஜேஷ், முற்போக்கு மாணவர் அமைப்பின் தோழர் ஜோஸ்வா, தாளநத்தம் ஊராட்சித் துணைத் தலைவர் முனுசாமி, ஓட்டுனர் பழனிசாமி, பி பள்ளிப்பட்டி கிருபா, உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் இறுதியாக மாணவர் அணி பொறுப்பாளர் செந்தமிழன் நன்றி கூறினார். வருகை தந்த அனைவருக்கும் ஆசிரியர் மு பிரபாகரன் விருந்தளித்து மகிழ்வுற்றார்.
