பெங்களூரு, நவ. 28- கருநாடக மாநிலம் பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் மூனறாம் தளம் திராவிர் அகம், பெரியார் மய்யம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அரங்கில் 23.11.2025 அன்று மாலை 4 மணிக்கு கருநாடக மாநில திராவிடர் கழக செயல் மறவர்கள் கூட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் மு.ஜானகி ராமன் தலைமையேற்று நடத்தினார். செயலாளர் இரா.முல்லைக்கோ அனைவரையும் வரவேற்று நிகழ்வின் நோக்கங் களை விளக்கினார். மாநில துணைத் தலைவர் பு.ர.கஜபதி, சே.குணவேந்தன் ஆகயோர் முன்னிலை வகித்து, நெடிய உரை நிகழ்த்தினார்.
சி.வரதராசன், ஜேம்ஸ், சு.தினேஷ், மேசாஞ், வே.பாவேந்தன், மணி, மலையரசன், இரா.கணேசன், செம்பருதி, ஈஜிபுரா தலைவர் கோ.சண்முகம், செயற்குழு உறுப்பினர் அமுதபாண்டியன் தீர்மானங்களை விளக்கி உரை நிகழ்த்தினார்.
மறைவெய்திய சுயமரியாதைச் சுடரொளி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று ஒரு மணித் துளி அமைதி காத்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் பிறந்த நாளினை டிசம்பர் திங்களில் சிறப்பாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.
கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் உலகத்தில் அதிகளவில் நிதியினை வழங்க 2026 ஜனவரி 26 திங்களுக்குள் தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
2026ஆம் ஆண்டில் பெரும் அளவில் கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, இரண்டு திங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்திட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
கவிஞர் தனம் வேளாங் கண்ணி, வே.பாவேந்தன், சு.தினேஷ் ஆகியோருக்கு “பெரியார் தொண்டறச் செம்மல்” விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
நிறைவாக மாநிலத் துணைத் தலைவர், கவிஞர் சே.குணவேந்தன் நன்றியுரை கூறி நிகழ்வினை நிறைவு செய்தார்.
