பிஜேபியை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி : நிதிஷ்குமார் மும்பை பயணம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, மே 9 2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாரை சந்திக்க நிதிஷ்குமார் முடிவு செய்து உள்ளார். 

2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற   தேர்தலில் ஆளுங்கட்சி யான பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு மாநில கட்சி தலை வர்களை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அடுத்தடுத்து பல கட்சித் தலை வர்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதற்காக, கடந்த ஏப்ரல் மாத தொடக் கத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில், மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரில், முதலமைச்சர் மம்தாவை, நிதிஷ் குமார் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஏப்ரல் இறுதியில் (24-ஆம் தேதி) நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு பற்றி அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒன்றாக அமர்ந்து பதிலளித்தனர். அதில், மம்தா   செய்தியாளர்களிடையே பேசும்போது, நான் நிதிஷ் குமாரிடம் ஒரேயொரு வேண்டுகோள் வைத்தேன். பீகாரில் இருந்து ஜெயபிரகாசின் இயக்கம் தொடங்கியது.

பீகாரில் நாம் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினால், அடுத்து செல்வது பற்றி முடிவு செய்யலாம் என கூறினேன். முதலில், நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். எனக்கு எந்தவித மறுப்பும் இல்லையென்று முன்பே கூட நான் தெரிவித்து இருக்கிறேன். பா.ஜ.க. பூஜ்யம் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம். ஊடகங்களின் ஆதரவு மற்றும் பொய் களால் அவர்கள் ஒரு பெரிய கதாநாயகர் களாக உருவாகி இருக்கிறார்கள் என்று பேசினார்.  

நிதிஷ்குமார் பேட்டி

  பீகார் முதலமைச்சர்  நிதிஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, அவர்கள் (பா.ஜ.க.) நாட் டின் வரலாற்றை மாற்ற விரும்புகிறார்கள். அதனாலேயே நான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருகிறேன். எனக்கென்று தனிப்பட்ட செயல்திட்டம் எதுவும் இல்லை.   பாட்னா நகரில் எதிர்க்கட்சி களை சேர்ந்த தலைவர்களுடன் சந்திப்பை நடத்தும் திட்டம் ஒன்றையும் சமீபத்தில் அவர் வெளியிட்டார்.  அதில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திட்டங் களை வகுப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மும்பை சென்று மூத்த எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கூட்டங்களை நடத்த அவர் முடிவு செய்து உள்ளார். இதன்படி வருகிற மே 11ஆம் தேதி மதியம் மும்பை நகருக்கு சென்று சேரும் அவர், பாந்திரா நகரில் சிவசேனா (பால் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது மாதோசிறீ  இல்லத் தில் வைத்து நேரில் சந்தித்து பேச இருக் கிறார். அதன்பின்னர், மும்பை மலபார் ஹில் நகரில் சில்வர் ஓக்ஸ் பகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். அய்க்கிய ஜனதா தளத்தின் மராட்டிய தலைவர் கபில் பாட்டீல் இந்த சந்திப்பு விவரங்களை உறுதிப்படுத்தி உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *