மேட்டூர், நவ. 14- மேட்டூர் மாவட்டம் சிந்தாமணியூர் பெரியார் பெருந்தொண்டர் எல்லப் பன் (வயது 87) 10.11.2025 அன்று இரவு காலமானார். தகவல் அறிந்ததும் அன்று இரவு சிந்தாமணியூர் சி சுப்பிரமணியன், எல்லப் பன் உடலுக்கு கழக கொடி போர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது இறுதி நிகழ்வு 11-11-2025 அன்று நடைபெற்றது.
கழகக் காப்பாளர் சிந்தாமணியூர் சி சுப்பிர மணியன்,மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா பாலு , செயலாளர் ப.கலைவாணன், ஓமலூர் ஒன்றியத் தலைவர் பெ. சவுந்தரராசன், மாவட்ட ப .க தலைவர் கோவி. அன்புமதி, செயலா ளர் சி.மதியழகன் மற்றும் மேட்டூர், சின்னப்பம் பட்டி, சேலம் பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் கள், தோழியர்கள் ஏரா ளமானோர் உடலுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
சிந்தாமணியூர் எல்லப்பன் மறைவு – கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
Leave a Comment
