பாகிஸ்தானுக்குக்கு 19% வரியை மட்டுமே விதித்துள்ள அமெரிக்கா இந்தியாவுக்கு 50% வரியை விதித்துள்ளதாக ஆர்.பி.அய். மேனாள் கவர்னர் ரகுராம் ராஜன் விமர்சித்துள்ளார். வரி விதிப்பில், பிரதமர் மோடி – டிரம்ப் நட்பு எங்கே என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதனால் எளிய மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
1971-இல் இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமெரிக்கா செயல்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்காவை நம்ப முடியாது என்று கூறியுள்ளார்.
விண்வெளியில் ஏப்பம் விடமுடியாது
ஏன் தெரியுமா?
உணவுடன் விழுங்கப்படும் வாயு, பிறகு வாய் வழியாக வெளியேறுவதுதான் ஏப்பம். பூமியில் ஈர்ப்பு விசை காரணமாக நம்மால் ஏப்பம் விடமுடிகிறது. ஆனால், விண்வெளியில் ஈர்ப்பு விசை இருக்காது. இதனால் சாப்பிட்ட பின் வயிற்றில் வாயு, நீர், உணவு எல்லாம் கலந்த நிலையில் இருக்கிறது. இதிலிருந்து உடலால் வாயுவை மட்டும் பிரித்து வெளியேற்ற முடியாது.
