புதுடில்லி, நவ. 12- பீகார் சட்டமன்ற இறுதிக் கட்ட தேர்தலுடன் நேற்று (11.11.2025) 7 மாநிலங்களில் 8 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடந்தது.
தெலங்கானா மாநிலம் ஜூபிளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பதிவா கின.
ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டம் அந்தா சட்டமன்ற தொகுதியில்இடைத்தேர்தல் நடந்தது. 80 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜார்கண்ட் மாநிலம் காட் ஷிலா சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. 74 சதவீத வாக்குகள் பதிவாகின.
காஷ்மீர் யூனியன் பிரதேசம் நக்ரோடா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.63 சதவீத வாக்குகள் பதி வாகின. காஷ்மீரில் பட்கம் சட்டமன்ற தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது. அங்கு 50 சதவீத வாக்குகள் பதிவாகின.
மிசோரம் மாநிலம் தம்பா சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அங்கு 75.92 சதவீத வாக்குகள் பதிவாகின.
பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. 60 சதவீத வாக்குகள் பதிவா கன. ஒடிசா மாநிலம் நுவபடா சட்டமன்ற தொகுதி யில்இடைத்தேர்தல் நடந்தது. 75.37 சதவீத வாக்குகள் பதிவாகின.
