புதுடில்லி, நவ.9– காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (8.11.2025) தனது எக்ஸ் தள பக்கத்தில் பள்ளி குழந்தைகள் உணவருந்தும் காணொலி ஒன்றை பதிவிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
‘மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பாடப் புத்தகங்களை தரை யில் விரித்து அதில் பள்ளி குழந்தைளுக்கு மதிய உணவு பரிமாறப்படும் காணொலிக் காட்சியை கண்டேன். அந்த நேரம் முதல் என் இதயம் உடைந்து நொறுங்கி போய் உள்ளது.
இதுபோன்ற பரிதாபகரமான நிலையில் நாட்டின் எதிர்காலத்தை வளர்ப்பதற்காக நாட்டின் பிரதமரும், முதலமைச்சரும் வெட்கப்பட வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்தை தாங்கி யிருக்கும் இந்த அப்பாவி குழந்தைகளின் கண்ணியம் காப்பதற்காக அவர்களுக்கு ஒரு தட்டு கூட கிடைக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலான அம்மாநிலத்தை ஆளும் பா.ஜனதா அரசாங்கம் அந்த குழந்தைகளுக்கு சென்று சேர வேண்டிய தட்டுகளைக் கூட திருடி விட்டனர்’.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
