ராகுல் காந்தி திட்டவட்டம்!
பாட்னா, நவ.8 பீகார் சட்டமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6.11.2025 அன்று நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு 11 ஆம் தேதி நடக்கிறது.
இதனை முன்னிட்டு நேற்று (7.11.2025) பீகாரில் பகல்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அரி யானாவில் 2 கோடி வாக்காளர்கள் உள்ளனர், வாக்குப் பட்டியலில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் போலியானவர்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து அரியானா தேர்தலைத் திருடிவிட்டனர் என்பதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்.
மக்களவை, மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் அவர்கள் திருடியதாக நாங்கள் ஆதாரங்க ளுடன் கூறினோம், இப்போது அவர்கள் பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள்.
கடைசி தருணம் வரை எங்களுக்கு வாக்காளர் பட்டியல் கிடைக்கவில்லை. பீகார் ஜென் z இளைஞர்கள் இங்கு வாக்குத் திருட்டு நடக்க விடமாட்டார்கள்.
இந்த வாக்குத் திருட்டு அதானி மற்றும் அம்பானி போன்றவர்களுக்கு உங்கள் நிலத்தை வழங்கவும், உங்கள் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தனி யார்மயமாக்கவும் இந்த வாக்கு திருட்டு நடத்தப்படுகிறது.
நிதிஷ் குமார், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பீகார் மக்களை தொழிலாளிகளாக மட்டுமே வைத்துள்ளனர்’’ என்று தெரி வித்தார்.
முன்னதாக நேற்று (7.11.2025) டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி என்பதை நாட்டின் ஜென் z இளைஞர்களுக்குத் தெளிவாக எடுத்துரைப்போம் என்று தெரிவித்திருந்தார்.
5.11.2025 அன்று அரியானாவில் வாக்கு மோசடி குறித்த தரவுகளை சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
