பாட்னா, நவ.5 ‘‘நாட்டில் 10 சதவீதம் மட்டுமே உள்ள மக்கள் இந்திய ராணுவத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். உன்னிப்பாக கவனித்தால் இது தெரியும்” என்று பீகார் சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கி ரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறி யுள்ளார். இதற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி ராகுல் காந்தி நேற்று (4.11.2025) குடும்பா என்ற இடத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் நாட்டில் உயர் ஜாதியினர் குறைவாக இருந்தாலும் ராணுவத்தை அவர்கள் தான் கட்டுப்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
உயர்ஜாதியினர் கட்டுப்பாட்டில் ராணுவம்
நாட்டின் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால் (உயர்ஜாதியினர்) நம் ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னிப் பாக கவனித்து பார்த்தால் இது தெரியும். நம் நாட்டில் தாழ்த்தப்பட்டோர், மிகவும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் மக்கள் என்று பார்த்தால் 90 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினர் பிரிவில் வருகின்றனர்.
இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களை எடுத்து பாருங்கள். அதில் பிற்படுத்தப்பட்டோர் அல்லது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். நாட்டின் 10 சதவீதமாக உள்ளவர்கள் (உயர் ஜாதியினர்)தான் இருப்பார்கள். அனைத்து பணிகளும் அவர்களுக்கு தான் செல்கிறது. அவர்கள் தான் ஆயுதப்படையை கட்டுப்படுத்துகின்றனர். உங்களால் மற்ற 90 சதவீத மக்கள் எங்கு உள்ளனர்? என்பதை கண்டுபிடிக்க முடியாது.
நாட்டின் 90 சதவீத மக்கள் தொகைக்கு உரிய இடமளிக்க வேண்டும். அவர்கள் கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழக்கூடிய ஒரு இந்தியாவை நாங்கள் விரும்புகிறோம். காங்கிரஸ் எப்போதும் பிற்ப டுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டுள்ளது. இனியும் அதனை செய்வோம்.”
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
