புதுடில்லி, நவ.5 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீர்ப்பா யச் சீர்திருத்தச் சட்டத்தின் அரசியல மைப்புச் சட்ட சவால்கள் தொடர்பான மனுக்களை விசாரித்தது.
இந்த வழக்கை அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வுக்கு அனுப்பக் கோரி ஒன்றிய அரசு திடீரென விடுத்த கோரிக்கையை உச்சநீதி மன்றம் கடுமையாக விமர்சித்தது.
இது தொடர்பாக தலைமை நீதிபதி, கூறும்போது ‘‘ஒன்றிய அரசு இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து, நீதிமன்றத்தில் தந்திரங்களைக் கையாள்வதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை’’ என்று குறிப்பிட்டார்.
மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட பிறகு, ஒன்றிய அரசு இத்தகைய கோரிக்கையை முன்வைப்பது அதிர்ச்சி யளிப்பதாக அமர்வு தெரிவித்தது.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வரும் நவம்பர் 23, 2025 அன்று பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். இவருக்குப் பிறகு, நீதிபதி சூர்யா காந்த் இந்தியாவின் 53 ஆவது தலைமை நீதிபதியாக நவம்பர் 24, 2025 அன்று பதவியேற்க உள்ளார்.
