பூரினியா, நவ.2 இந்தியா கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து சமாஜ்வாடி கட்சித் தலை வர் அகிலேஷ் பூரினியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அகிலேஷ் பேசியதாவது:-
பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும். ஒன்றிய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை. பீகார் மக்கள், மாநிலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்து பவர்கள் அல்ல. ஒட்டு மொத்த நாட்டையும் மேம்படுத்துவார்கள். உ.பி. மக்கள் அவாத்தில் பாஜகவை தோற்கடித்தனர். அதேபோல் பீகார் மக்கள் மகாத்தில் அவர்களை தோற்கடிப்பார்கள்.
இவ்வாறு அகிலேஷ் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத் தில் பாஜக-வுக்கு மிகவும் குறைவான இடங்களே கிடைத்தன. இதனால் பாஜக-வால் தனிப்பெரும்பான்மை றெ முடியாமல் போனது. 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 37 இடங்களில் வெற்றி பெற்றது.
