புதுடில்லி, நவ. 1– டில்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது, இது குறித்து ‘லோக்கல் சர்கிள்ஸ்’ என்ற சமூக வலைதளத்தில் சர்வே எடுக்கப்பட்டது.
இதில் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களான குருகிராம், நொய்டா, பரிதாபாத், காஜியாபாத் ஆகிய பகுதிகளை சேர்ந்த 15,000 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
அவர்கள் அளித்த பதில்களை தொகுத்து அறிக்கையாக வெளியிட்டு உள்ளனர்.
அதில் கூறியிருப்பதா வது:
டில்லியின் காற்றுத் தர குறியீடு அக்டோபரில் 400 – 500 என்ற மிக மோசமான நிலையிலேயே இருந்தது. தீபாவளி பட்டாசு புகை, விவசாய கழிவுகள் எரிப்பு இதற்கு முக்கிய காரணம். இது, உலக சுகாதார நிறுவனத்தின் வரம்பை விட, 10 மடங்கு அதிகம்.
இதன் விளைவாக, பெரும்பாலான குடும்பங் களில் மூச்சுத்திணறல், இருமல், தொண்டை வலி, கண் எரிச்சல், தலைவலி போன்ற காற்றுமாசு தொடர்பான நோய்கள் காணப்படுகின்றன.
சர்வேயில் பங்கேற்றவர் களில், 17 சதவீதம் பேர் வீட்டில், நான்கு பேருக்கு மேல் நோயால் பாதிக்கப்ப ட்டிருப்பதாகவும், 25 சதவீதம் பேர் வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்டோர் நோயுற்று இருப்பதாகவும், 33 சதவீதம் பேர் வீட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதன்படி, 75 சதவீத வீடுகளில் ஒருவராவது நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரிகிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
