ஊற்றங்கரை, மே 15 – ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் ஏப்ரல் மாத நிகழ்வாக தமிழர் கலை பண்பாட்டு புரட்சி நாள் விழா கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகு சிறப்புடன் நடைபெற்றது
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, கவிஞர் கண்ணி மைக்கு பாராட்டு விழா, நூல் வெளியீட்டு விழா என்ற மூன்று நிகழ்வுகளையும் உள்ளடக்கி நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஒன்றிய திராவிடர் கழக இளை ஞரணி தலைவர் கோ.சரவணன் வரவேற்புரை ஆற்றி தொடங்கி வைத்தார். விடுதலை வாசகர் வட் டத்தின் பொருளாளர் ஆடிட்டர் ந. இராசேந்திரன் மாத அறிக்கை வாசித்தார். மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் அண்ணா.சரவணன் தலைமை தாங்கி உரை யாற்றினார்.
அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநில உதவி தலைவர் ச.மணி மற்றும் வழக்குரைஞர் ந.பெருமாள் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றினர்
வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் வெ.மலர்விழி அவர் கள் எழுதிய “சு. தமிழ்ச்செல்வி நாவல்களில் பெண் கதை மாந்தர் கள்’ என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது . கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியின் தமிழ் துணைத் தலைவர் முனைவர் மா.வெங்கடேசன் நூலை வெளியிட திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் பி,பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்
நூல் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் படத்திறப்பு நடைபெற்றது. வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் தமிழாய்வுத்துறை தலைவர் ம.இராமச்சந்திரன் அவர்கள் படத்தை திறந்து வைத்து நினை வேந்தல் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசின் 2021 ஆம் ஆண்டிற் கான தமிழ் செம்மல் விருது மற்றும் தந்தை பெரியார் விருது ஆகிய விருதுகளை பெற்ற குயில் மாத இதழின் ஆசிரியர் கவிஞர் இரா. கண்ணிமை அவர்கள் விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டுப் பெற்றார். விடுதலை வாசகர் வட் டத்தின் சார்பில் வாசகர் வட்டத் தின் செயலாளர் பழ.பிரபு பாராட் டுரை நிகழ்த்தினார். கவிஞரும் நாவலாசிரியருமான மா.இரவீந்திர பாரதி அவர்கள் “கனல் நெருப்பும் கற்கண்டும்” என்கிற தலைப்பில் சிறப்பான உரையை வழங்கினார்.
மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் சீனிமுத்து. இராஜேசன் நிகழ்வினை ஒருங் கிணைக்க திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர் அண்ணா . அப்பா சாமி நன்றியுரையாற்றினார்.