பெங்களூரு, அக்.30- பெங்களூரு ஆர்.ஏ.எம்.எஸ் வணிகப் பகுப்பாய்வு நிறுவனம் மற்றும் உலகளாவிய கல்வி மதிப்பீட்டு அமைப்புகள் ஆகியவற்றால் தேசிய அளவில் நடத்தப்பட்ட, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் ஸ்பெல்பீ போட்டிகளில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், போட்டியாளர்களின் எழுத்துத் திறன் சோதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வார்த்தைகளின் வரையறை மற்றும் உச்சரிப்பையும் அறிந்து கொள்ளும் வகையில் தேர்வு அமைந்திருந்தது.
இப் போட்டியில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 3 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களில் 40 மாணவர்கள் பங்கேற்று, போட்டிகளில் சிறப் பான பங்கேற்பை வெளிப்படுத்தியதற்காகப் பல்வேறு பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். மேலும், சிறந்த கல்விசார் செயல்பாடுகள், வழிநடத்தும் திறமை, மாணவர்களின் கல்வி சார் வளர்ச்சி மற்றும் பள்ளியின் கல்வி தரத்தை உயர்த்திய முயற் சிகளைப் பாராட்டி, பள்ளி முதல்வர் முனைவர்.க.வனிதாவுக்கு அவர்களுக்கு சிறந்த முதல்வர் மற்றும் சிறந்த பள்ளிக்கான விருப்பங்கள் வழங்கப்பட்டது.
மேலும், இப்போட் டிகள் மூலம் மாண வர்கள் தங்கள் அறிவுத் திறனையும், ஆங்கில மொழித் திறனையும், அறிவியல் விழிப்புணர்வையும் மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதற்கு உரிய வகையில் மாணவர்களை உரிய வகையில் ஒருங்கிணைத்த இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர், பள்ளியின் முதுகலை உயிரியல் ஆசிரியர், ஜி. சிவராமகிருஷ்ணனுக்கும் சிறந்த ஒருங்கிணைப் பாளர் விருது கிடைத் துள்ளது.
இந்த சிறப்பான விருதுகள் பள்ளியின் கல்வித் திறமைக்கும், மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
