மன்னார்குடி, அக். 29- 27.10.2025 அன்று மாலை 05:30 மணியளவில் மன்னார்குடி பெரிய கடை வீதி பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கருத் துரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஆர்.பி. எஸ்.சித்தார்த்தன், தலைமையேற்று உரையாற்றினார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக-பொன்முடி, மாவட்ட செயலாளர் சு.கிருட்டினமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் வீ.புஷ்பநாதன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். பொதுக்குழு உறுப்பினர் கோ.கணே சன், அனைவரையும் வரவேற்றார்.
மன்னை நகரத் தலைவர் எஸ்.என்.உத்திராபதி, ப.க. மாவட்ட செயலாளர் தங்க.வீரமணி, ப.க. மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.முரளிதரன், மன்னை ஒன்றிய தலைவர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் கா.செல்வராசு, ப.க. ஒன்றிய தலைவர் மு.செ.ராமலிங்கம், முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் ரே.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் பொன்.செல்வராஜ், கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.பி.குமார், கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு, திருத்துறைப்பூண்டி நகர தலைவர் சு.சித்தார்த்தன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, பேராசிரியர் ஜி.காமராஜ், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சதா.அய்யப்பன், நீடாமங்கலம் ஜீவானந்தம், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் இரா.கோபால், திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் ச.சாருகான், முன்னாள் மாவட்ட இளைஞரணிப் பொறுப்பாளர் மன்னைசித்து, புள்ளவராயன்முடிகா காடு ச.அறிவானந்தம், பூவனூர் எஸ்.சந்திரசேகரன், செருகளத்தூர் என்.கலைச்செல்வன், ஆர்.பாலகிருஷ்ணன், த.ஆசைதம்பி, நீடாமங்கலம் இரா.அய்யப்பன், மகளிரணி சி.கலைவாணி, கா.செல்வ ராசு, ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் நா.இன்பக்கடல் நன்றி கூறினார்
23-10-2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு மன்னார்குடி மாவட்ட கழக சார்பில் நிதி திரட்டி நவம்பர் 27 காலை 10:00 மணியளவில் மன்னார்குடியில் நடைபெறும் அரங்கக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ 10,00.000 வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பரப் புரை பொதுக்கூட்டத்தை மன்னார் குடியில் மிக எழுச்சியுடன் நடத்து வது எனவும் மன்னார்குடிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மன்னார்குடி (கழக) மாவட்டம் சார்பில் எழுச்சி மிகு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது
புதிய பொறுப்பாளர்கள்
மகளிரணி
மாவட்ட மகளிரணித் தலைவர் சி.கலைவாணி, திருத்துறைப்பூண்டி.
மாவட்ட மகளிரணிச் செயலாளர் அ.ஜோதி, நீடாமங்கலம்.
இளைஞரணி
மாவட்ட இளைஞரணி தலைவர் கோரா.வீரத்தமிழன்நீடாமங்கலம், மாவட்ட இளைஞரணி செய லாளர் மு. மதன் திருத்துறைப்பூண்டி, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ம.மணிகண்டன், மன்னார் குடி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் க.ராஜேஷ் கண்ணன், நீடாமங்கலம்
திராவிட மாணவர் கழகம்
திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் கோ.அழகேசன், திருத்துறைப்பூண்டி, திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் ச.சாருக்கான் நீடாமங்கலம்
பகுத்தறிவாளர் கழகம்
மாவட்ட துணைச் செயலாளர் ரெ.புகழேந்தி, திருத்துறைப்பூண்டி
வழக்குரைஞரணி
மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் சு.சிங்காரவேல், தலைமைச் செயற்குழுவில் அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள்: மன்னார்குடி மாவட்ட செயலாளர் சு. கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கோ.கணேசன், ஆகியோருக்கு மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், உள்ளிட்ட பொறுப்பா ளர்கள் சிறப்பு செய்தனர்.
