கோபி, அக். 29- 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் கோபி கரட்டடிபாளையம் ம.கந்தசாமி இல்லத்தில் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
பெரியார் பெருந்தொண்டர் பெ.இராஜமாணிக்கம், தலைமை யேற்று உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கருத்துரை யாற்றினார்.
மாவட்ட தலைவர் வழக் குரைஞர் மு.சென்னியப்பன், மாநில இளைஞரணி செய லாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட காப்பாளர் ந.சிவலிங்கம், ப.க.மாநில அமைப்பாளர் அ.குப்புசாமி, ப.க. மாவட்ட தலைவர் சீனு.தமிழ்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
திராவிட மாணவர் கழக மாவட்ட துணைச் செயலாளர் பெ.விக்னேஷ், அனைவரையும் வரவேற்றார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிவேல், மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் ப.திலக வதி, மாவட்ட துணைச் செயலாளர் ஜி.கே.மூர்த்தி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கார்த்திக், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சூர்யா, மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவர் அஜித்குமார், நம்பியூர் ஒன்றியச் செயலாளர் செ.பிரசாந்த் குமார், நகரச் செயலாளர் சீனு.மதிவாணன், ஆனந்தராஜ், ஓய்வு பெற்ற வட்டார சுகாதார ஆய்வாளர் லட்சுமணன், கந்தசாமி, செ.அன்புவீரமணி, செ.பகுத்தறிவு, ப.க. பொறுப் பாளர் அருள், நம்பியூர் ஒன்றிய இளைஞரணி கதிரவன், கோபி சிவக்குமார், பட்டரமங்கலம் கிளைக் கழகம். சுப்பன், ஜீவன், பழனிச்சாமி, சுமதி, ராதா, சின்னாரிபாளையம் கிளைக் கழகம் நவீன், துளசிமணி, ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் த.எழில் அரசு, நன்றி கூறினார்
23-10-2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது என முடிவு செய் யப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு கோபி மாவட்ட கழக சார்பில் நிதி திரட்டி நவம்பர் 23 அன்று கோபியில் நடைபெறும் பொதுக் கூட்டத் தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ 10,00.000 வழங்குவது என முடிவு செய்யப் பட்டது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க ஆட்சி இதுதான் திரா விடம் – திராவிட மாடல் ஆட்சி பரப்புரை பொதுக்கூட்டத்தை கோபிசெட்டிபாளையத்தில் மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும் கோபிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கோபி (கழக) மாவட்டம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது
தலைமைச் செயற்குழுவில் அறிவிக்கப்பட்ட மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் ப.திலகவதிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சிறப்பு செய்தார்.
