பெங்களூர், அக்.28 சில நாட்களுக்கு முன்பு கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அவர்களுக்குப் பணம் கொடுக்க, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை ஊழல் செய்ய வற்புறுத்துவதாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப் பின் அத்தனைத் தலை வர்களும் ஊழல் செய்து, வரும் பணத்தில் தான் வாழ்கின்ற்னர். நான் மக்களுக்காகப் பாடு படுகிறேன். இருப்பினும் முதலில் பணம்; பிறகு உனது பெயரை காப் பாற்றிக்கொள் என்று மிரட்டுகின்றனர்’’ என்று காணொலியில் கூறி இருந்தார்.
இதனைப் பகிர்ந்த கருநாடக தொழில் நுட்பத் துறை அமைச்சர் பிரியங் கார்கே வெளியிட்ட செய்தி குறிப்பில்,
குற்றச்சாட்டு
‘‘கருநாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர், உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனம் என்று தம்பட்டமடித்துக் கொள்ளும் ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) பாஜகவை கட்டுப்படுத்துவதாக அதிர்ச் சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் கூறிய முக்கிய குற்றச் சாட்டுகள் பின்வருமாறு:
பாஜக தலைவர்கள் ஆர்எஸ்எஸ்-க்கு அடிபணிந்து செயல்படுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பு என்று கூறப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் ஆதரவாளர்கள் பணம் அல்லது நிலங்கள் மூலம் பயனடைந்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா (BSY) ஆர்எஸ்எஸ்-க்கு பணம் செலுத்தி ஆட்சியில் தொடர்ந்தார் என்று குற்றச் சாட்டு உள்ளது.
பி.எஸ்.யெடியூரப்பா ஆர்எஸ்எஸ்-சல் கை காட்டப்பட்ட செய்தித் தாள்களுக்கும் பணம் செலுத்தியதாகக் கூறப்படு கிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிறகு ஊழல் செய்து பணம் கொடுத்தவர்களின் பட்டியல் பி.எஸ். எடியூரப்பாவிடம் உள்ளதாகவும், இதனால் அவர்கள் இன்னும் அதிகாரத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊழலை அம்பலப்படுத்துவோம் என்று அந்த எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்’’ என்றும் கூறிய பிரியங் கார்கே, அந்த சமூகவலைதளக் காணொலி கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பாஜக எம்.எல்.ஏ.-வின் கூற்றாக மட்டுமே உள்ளது என்று கூறியிருந்தார்.
அந்தக் காணொலியில் உள்ள சட்டமன்ற உறுப் பினரின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. பாஜக சட்டமன்ற உறுப்பினர் பேசும்காணொலியை மேனாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே. அரிபிரசாத் 21.10.2025 அன்று வெளியிட்டிருந்தார்.
