புதுடில்லி, அக். 28- கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலையை தடுக்க பிறப் பிக்கப்பட்ட வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றப்படு கிறதா? என 8 வாரங்களுக்குள் பதி லளிக்குமாறு மாநிலங்கள், யூனி யன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஆந்திராவில் நீட் பயிற்சி மாணவர் திடீர் மரணம் தொடர் பான வழக்கை கடந்த ஜூலை மாதம் விசா ரித்த உச்சநீதிமன்றம் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மய்யங்களில் மாணவர் தற்கொலை அதிகரித்து வருவது குறித்து கவலை வெளியிட்டது. பின்னர் மாணவர்களின் மன நல பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அறிவுறுத்திய உச்சநீதி மன்றம், அத்துடன் மாணவர் தற்கொலையை தடுக்கும் வகையில் நாடு முழுவதற்குமான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உத்தரவிட்டது. 15 வகையான வழிகாட்டுதல்களை வெளியிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு தகுந்த சட்டம் அல்லது ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கும் வரை இந்த வழிகாட்டுதல்கள் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவு
Leave a Comment
