பெங்களுரு, அக். 28- கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்க முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருக்கும் மேனாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டி, தேசபக்தி முழக்கத்துடன் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நடைப்பயணத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். நவம்பர் 1 ஆம் தேதி கர்நாடகாவின் கங்காவதி நகரில் நடைபெறவுள்ள இந்த நடைப்பயணத்தில், ஆர்.எஸ்.எஸ். சீருடையணிந்து பங்கேற்பதாக அவர் வெளியிட்ட காணொலியில் தெரிவித்துள்ளார்.
ஜனார்தன் ரெட்டி, கர்நாடகா வில் பாஜக ஆட்சி முடிவடைந்த பின்னர், சட்டவிரோதச் சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டவர். இவரது சுரங்க சாம்ராஜ்யம், மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் கீழை நாடுகளுடன் பெரும் வணிகத்தில் ஈடுபட்டிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2013 ஆம் ஆண்டு அய்.எஸ்.அய்.எஸ். தாக்குதல்களின் போது, வெளி நாட்டு ஊடகங்கள் இவரது சுரங்க நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த இரும்புத் தாது போன்ற கனிமங்களைப் பயன்படுத்தி தீவிரவாத அமைப் புகள் ஆயுதங்கள் தயாரித்ததாகக் குற்றம்சாட்டின. இந்தியாவில் நடந்த புல்வாமா, உரி, மற்றும் பதான்கோட் தாக்குதல்களுக்கு இவரது சட்டவிரோதக் கனிம ஏற்றுமதி மறைமுகமாக உதவியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
பண மதிப்பிழப்பு நடவடிக் கைக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுக்களைப் பெற வரிசையில் நின்று 450 க்கும் மேற்பட்டோர் உயிரிவிட்ட நிலையில், இவர் தனது இல்லத்திருமண விழாவில் மண மேடையை சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுக்களைப் பயன்படுத்தி, அலங்கரித்ததாகவும் ஜனார்தன் ரெட்டி மீது குற்றச்சாட்டு உள்ளது. இவர் மீதான இந்தக் குற்றச் சாட்டுகள், அவரது தேசபக்தி முழக்கங்களுக்கு முரண்பாடாக அமைந்துள்ளன.
ஜனார்தன் ரெட்டி வெளி யிட்ட காணொலியில், “நூறாண்டு காலமாகத் தன்னலமற்ற சேவை யாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ். நடைப்பயணத்தில் பெருமையுடன் பங்கேற்கிறேன். எல்லா தேசபக்தர்களும் இந்த பிரமாண்ட நடைப்பயணத்தில் பங்கேற்றுத் தேசத்தை கட்டியெழுப்புவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார். காணொலியில் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். பாடலான, “மாருபூமி த்வஜே, மாத்ருபூமி ஜானதே, மாத்ருபூமி நமஸ்தேதூதி” (தாய்மண் நமது உயிர், அதற்காக உயிரைத் தருவோம், தாய்மண்ணை வணங்குவோம்) ஒலிப்பதைக் கேட்க முடிகிறது.
நாட்டின் மண்ணில் இருந்து சட்டவிரோதமாகக் கனிமங்களை ஏற்றுமதி செய்து பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியவர், இப்போது தேசபக்தி முழக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். நடைப்பயணத்தில் பங்கேற்கிறாராம்! இதுதான் ஆர்.எஸ்.எஸ். பணி தேசப்க்தியோ?
சட்டவிரோத சுரங்க முறைகேட்டு வழக்கில் சிக்கிய ஜனார்தன் ரெட்டி: தேசபக்தி முழக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். நடைப்பயணத்தில் பங்கேற்பாம்!
Leave a Comment
