கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.10.2025

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* “ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை; வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை”. பீகாரில் காங். கூட்டணியின் தேஜஸ்வி வாக்குறுதி!

* பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டியது மிக முக்கியம், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கேலாட் கருத்து.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*அக்டோபர் 21 அன்று பிரதமர் மோடியுடன் பேசிய பின்னர் ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘நாங்கள் நிறைய விசயங்களைப் பற்றி பேசினோம், பெரும்பாலும் வர்த்தக உலகம் பற்றி பேசினோம். அவர் ரஷ்யாவிலிருந்து இனி அதிகம் எண்ணெய் வாங்கப் போவதில்லை. என்னைப் போலவே அந்தப் போர் முடிவடைவதையே அவரும் காண விரும்புகிறார்’ என்று தெரிவித்தார்.

தி இந்து:

* ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற  அரசு ஊழியர் பணி இடைநீக்கம்: கருநாடகாவின் ரெய்ச்சூர் மாவட்டம், லிங்சாகூரில் கடந்த 12ஆம் தேதி நடந்த ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்ற சிர்வார் வட்டார மேம்பாட்டு அதிகாரி பிரவீன் குமார் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தி டெலிகிராப்:

*கருநாடகா ஆலந்த் தொகுதியில் போலி வாக்காளர் நீக்க விண்ணப்பத்திற்கு ரூ.80 வழங்கியது அம்பலம்: கருநாடக எஸ்.அய்.டி விசாரணையில் கண்டுபிடிப்பு. கருநாடக 2023 தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களை நீக்கியதை ராகுல் காந்தி “வாக்குத் திருட்டு” என்று குற்றம் சாட்டினார்; பா.ஜ.க ஆட்சியில் வாக்களிக்கும் உரிமை வெறும் “பொருளாக” மாற்றப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*தேஜஸ்வி தான் மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர்: தீபங்கர் பட்டாச்சார்யா உறுதி பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என சிபிஅய் (எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா உறுதிப்படுத்தினார்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *