* ம.பி.யில் ஜாதிய வன்மம்: மத்தியப் பிரதேசத்தில் இந்த மாதம் நடந்த இரண்டாவது சம்பவத்தில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் மீது ‘தாக்குதல் நடத்தி, அவர் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
* அயோத்தியில் நடைபெற்ற விளக்கு ஏற்றும் விழா காட்சிப்பதிவு: மக்கள் மீதமுள்ள எண்ணெயை மண் விளக்குகளில் (தியாக்கள்) சேகரிக்கும் வீடியோவை வெளியிட்ட அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தையும் மாநிலத்தை வாட்டி வதைக்கும் “பணவீக்கம் மற்றும் வறுமையின் யதார்த்தம்” குறித்து செயல் தலைவர் கடுமையாக விமர்சனம்.
* பீகார் சட்டமன்ற தேர்தல் 2025: பின்தங்கிய வகுப்புகள், தாழ்த்தப்பட்ட சமூகங்கள் மற்றும் சிறுபான்மையினரைச் சேர்ந்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சித்தாந்தத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக, பூர்ணியா எம்.பி.பப்பு பேச்சு.
தி இந்து:
* இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்று மோடி ஒரு தொலைபேசி உரையாடலில் “உறுதியளித்தார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய கூற்றை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் விமர்சனம். பிரதமர் “உள்நாட்டில் சத்தமாக” இருக் கிறார், ஆனால் “வெளிநாட்டில் அமைதியாக” இருக் கிறார் என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி, இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்தக் கோரியுள்ளது.
தி டெலிகிராப்:
* தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட மற்றும் திறன் மேம்பாட்டுப் படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் இழப்பதால், டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னணி கல்லூரிகளில் கிட்டத்தட்ட 5,000 இடங்கள் காலியாக உள்ளன
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பாட்னா: பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுவராஜ் அணியின் மூன்று வேட்பாளர்கள் பீகார் தேர்தல் போட்டியில் இருந்து விலகி பாஜகவுக்கு ஆதரவளித்தனர். இது காவிக் கட்சியின் “வற்புறுத்தல் மற்றும் மிரட்டலின்” விளைவு என அக்கட்சி குற்றச் சாட்டு.
– குடந்தை கருணா
