பாட்னா, அக்.22 பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் போரஹா கிராமத்தில், தீபாவளி அன்று நள்ளிரவில் மசூதி மீது ஹிந்துத்துவா கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் மசூதியைச் சேதப்படுத்தி யதுடன், அங்கிருந்த மத நூலை யும் கிழித்து எறிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராம நவமி, விநாயகர் சதூர்த்தி மற்றும் அனுமன் ஜெயந்தி போன்ற நாட்களில் இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் மற்றும் இஸ்லாமியர்களின் வழி பாட்டுத்தலங்களில் சென்று தாக்குதல் நடத்தும் கும்பல் தற்போது தீபாவளி கொண்டாட்டத்தின் பெயரில் மசூதிகளையும் தாக்கும் நிகழ்வு அரங்கேறி வருகிறது
