பிரான்சு அருங்காட்சியகத்தில் நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை

பாரீஸ், அக்.20 பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்காட்சியகம். இங்கு மோனோலிசா ஓவியம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப் பொருட்கள், சிற்பங்கள், நகைகள், ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நகைகள் கொள்ளை

இங்குள்ள கலைப் பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் பல முறை திருடுபோயுள்ளன. கொள்ளை முயற்சி சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் (18.10.2025) ஒரு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இரு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் அருங்காட்சியகத்தில் கட்டட பராமரிப்பு நடைபெற்ற இடத்தின் வழியாக ஊடுருவியுள்ளனர்.

‘ஹைட்ராலிக்’ ஏணியை பயன் படுத்தி அருங்காட்சியகத்தில் நுழைந்த கொள்ளையர்கள், அப்போலோ வளாகத்தில் உள்ள பிரெஞ்சு மன்னர்கள் மற்றும் ராணிகள் பயன்படுத்திய 9 கிரீடங்கள் மற்றும் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இது மன்னர் நெப்போலியன் காலத்து நகைகள் ஆகும்.டிஸ்க் கட்டர் மூலம் நகைககள் வைத்திருந்த கண்ணாடி பெட்டியை வெட்டி கிரீடங்கள் மற்றும் நகைகளை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் 7 நிமிடங்களில் முடிந்துள்ளது. நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியுள்ளனர் என பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனஸ் தெரிவித்தார்.

பிரான்சு நாட்டின் பிரபல அருங்காட்சியகத்தில் மிகப் பெரிய கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளதை அந்நாட்டு கலாச்சாரத்துறை அமைச்சர் ரச்சிதா ததி நேற்று (19.10.2025) காலை அறிவித்தார். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அருங்காட்சியகத்துக்கு ஏற்பட்ட சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கொள்ளைச் சம்பவத்தையடுத்து, இலூவா அருங்காட்சிகம் நேற்று (19.10.2025) மூடப்பட்டது. அருங்காட்சியகம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. அங்கு நேற்று பார்வையாளர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *