அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் நிண்ணியூர் கிராமம் திராவிடர் கழக குடும்பத்தைச் சார்ந்த மறைந்த சாமிநாதன் அவர்களுடைய மனைவியும், ராசாத்தி, புழல் ஆசிரியர் செந்துறை ராஜேந்திரன், ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர் ராஜகோபால் (கேம்) துபாய் ராதா, அரியலூர் மூத்த வழக்குரைஞர் பகுத்தறிவாளன் வேளாண்மை ஆராய்ச்சி அலுவலர் தங்கசாமி, மருந்தாளுநர் செந்தாமரை ஆகியோரது தாயார் தையல் நாயகி அம்மாள் (வயது 86) அவர்கள் வயது மூப்பு காரணமாக நேற்று (17.10.2025) நண்பகல் 12 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்! அம்மையாரின் இறுதி மரியாதை நிகழ்வு இன்று (18.10.2025) பிற்பகல் 2.00 மணியளவில் நிண்ணியூர் கிராமத்தில் நடைபெற்றது.