பெங்களுரு, அக். 15– தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கருநாடகா வில் உள்ள அரசுக் கட்டடங் களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி களுக்கு தடை விதிக்க வேண் டும் என முதலமைச்சர் சித்தரா மையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து தமிழ்நாட் டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கருநாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, “தமிழ்நாட்டில் என்ன விதி இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, நாங்கள் சொல்வதெல்லாம், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளை தனியார் இடங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான். அவர்கள் அதை தங்கள் வீடுகளிலும், தனியார் நிலங்களிலும் ஒரு விடுதியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவர்கள் விரும்பியதைச் செய்யட்டும். ஆனால், வகுப்புவாத விதைகளை விதைத்து மக்களை அச்சுறுத்தும் இந்த நிகழ்ச்சி நல்லதல்ல.
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தியாவின் சிறப்புக் குடிமக்களா? அவர்கள் எப்படிக் குச்சிகளுடன் அணிவகுப்பு நடத்த முடியும்? வேறு எந்த சமூகத்தினர், தாழ்த்தப்பட்டோர்கள், பிற்படுத்தப்பட்டோர், ஓ.பி.சி.க்கள், தங்கள் சமூக வண்ணச் சட்டைகளை அணிந்து கொண்டு குச்சிகளைப் பிடித்து அணிவகுப்பு நடத்தினால், யாராவது அதை அனுமதிப்பார்களா? அவர்கள் பல ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறார்கள், அதற்காக அவர்கள் இதை தொடர வேண்டும் என்று அர்த்தமல்ல, இல்லையா? சட்டப்படி அவர்கள் அனுமதி பெறட்டும். அவர்கள் இந்திய அரசியலமைப்பை விட பெரியவர்கள் இல்லை” என்று தெரிவித்தார்
இந்நிலையில், தனக்கு நிறைய மிரட்டல்கள் வருவதாக அமைச்சர் பிரியங்க் கார்கே தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கடந்த இரண்டு நாட்களாக, எனது தொலைபேசி நிறுத்தாமல் ஒலிக்கிறது. அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளை நான் கேள்வி கேட்கவும் தடுக்கவும் துணிந்ததால், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராக மிரட்டல்கள் மற்றும் மோசமான சொற்கள் நிறைந்த அழைப்புகள் வருகிறது.
ஆனால் இதற்காக நான் அதிர்ச்சியடையவில்லை மற்றும் ஆச்சரியப்படவும் இல்லை. காந்தியார் அல்லது பாபாசாகேப் அம்பேத்கரையே ஆர்.எஸ்.எஸ். விட்டுவைக்காதபோது, அவர்கள் ஏன் என்னை விட்டுவைக்க வேண்டும்?
அச்சுறுத்தல்கள் மற்றும் தனிப்பட்ட அவதூறுகள் என்னை அமைதிப்படுத்தும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் தவறாக நினைக் கிறார்கள்.
புத்தர், பசவண்ணா மற்றும் பாபாசாகேப் அம்பேத்கார் ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. சமத்து வம், பகுத்தறிவு மற்றும் இரக்கத்தில் வேரூன்றிய சமூகம் மற்றும் இந்த நாட்டை மிகவும் ஆபத்தான (RSS) வைரஸ்களிலிருந்து தூய்மைப் படுத்த வேண்டிய நேரம் இது” என்று பதிவிட்டுள்ளார்.