தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் பாக்ஸ் கான் நிறுவனம் திராவிட மாடலின் அரசுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை,அக்.14 தமிழ்நாட்டை ஃபாக்ஸ்கான் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி; இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்வது தொடர்பாக முதலமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஃபாக்ஸ்கான் ரூ.15,000 கோடி முதலீடு செய்து 14,000 திறமையான வேலைகளை உருவாக்க உள்ளது. இது மாநிலத்தின் மின்னணுவியல் மற்றும் மேம்பட்ட உற்பத்தி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

முதலமைச்சரின் சமூக வலைதளப் பதிவில்:

தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து எங்களுடன் எதிர்காலத்தை வடிவமைத்த ஃபாக்ஸ்கானுக்கு நன்றி. இதுதான் திராவிட மாடல் அரசின் நடவடிக்கை. தமிழ்நாட்டை தெற்காசியாவின் உற்பத்தி மற்றும் புதுமை மய்யமாக மாற்று வதற்கான எங்கள் பயணத்தில் இது மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது என கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *