ஒரு நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகமாக இருப்பது வர்த்தக பற்றாக்குறை எனப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் (செப்டம்பர்) இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை ரூ. 2 லட்சம் கோடியாக (28 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) உயர்ந்ததாக யூனியன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தை (ஆகஸ்டு) காட்டிலும் ரூ.39 ஆயிரம் கோடி (4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதிகமாகும். கடந்த ஆகஸ்டு மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி இடையிலான வித் தியாசம் ரூ.2.11 லட்சம் கோடியாக (24 மில்லியன் டாலர்கள்) இருந்துள்ளது. இதற்கான முக்கிய காரணமாக தங்கம் இறக் குமதி அதிகரிப்பு என அறிக்கை கூறுகிறது.
இதுதான் பிஜேபி ஆட்சியின் சாதனையோ! வர்த்தகப் பற்றாக்குறை ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிப்பு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books