குடும்பத்தில் யாருக்காவது மறதி நோய் இருந்தாலோ அல்லது ்சிறு வயதில் தலைக்காயம் ஏற்பட்டிருந்தாலோ மறதி நோய் வர வாய்ப்பு அதிகமுண்டு.
மறதி நோய் வராமல் தடுக்க முதலில் முழு உடல் பரிசோதனை செய்து உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன், மாரடைப்பு மற்றும் தைராய்டு நோய்கள் தொல்லை இருப்பின் அதற்குத் தக்க சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி மூலம் முறையான ரத்த ஓட்டத்தைச் சீராக்கி ஞாபக சக்தியைக் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். தினசரி காலை மற்றும் மாலையில் அரை மணிநேரம் உடல் வெயிலில் படுமாறு செயல்பட்டால் மறதி நோய் வருவது வெகுவாக குறைய வாய்ப்புண்டு. சுமார் 8 மணி நேரத் தூக்கம் அவசியம். இதைக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் காலையிலும் மாலையிலும் குறைந்தது 15-20 நிமிடங்களாவது தியானம் மற்றும் பிராணாயாமத்தைக் கடைப்பிடித்தால் மறதியை வெல்ல முடியும்.மறதியை தவிர்க்க சத்தான உணவுகள் அவசியம்.
கீழ்க்காணும் உணவு வகைகள் ஆராய்ச்சிகளுக்குப் பின்பு நிைனவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையவை என்று நிரூபிக்கப்பட்டவை.
பசலைக்கீரை, ஸ்ட்ராபெரி மற்றும் புளுபேரி, ஆப்பிள், வெங்காயம், மீன்களில் முக்கியமாக சூரைமீன், மீன் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் இலவங்கப்பட்டை எண்ணெய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ராஜ்மா, உலர்ந்த திராட்சை, வாழைப்பழம், கிரீன்பீ, வால்நட், முளைகட்டிய கோதுமை, காபி பட்டை மற்றும் வல்லாரைக்கீரை.