நானும் இந்தியாவில் பல இடங்களைச் சுற்றி பார்த்து இருக்கிறேன். ஆனால் நம் தமிழ்நாட்டு நடுத்தர பெண்களின் சுதந்திரமான போக்கு செயல்பாடு எங்கேயும் பார்க்க முடியவில்லை. புத்தகக் காட்சிக்கு வரும் பெண்கள் பெரியார் நூல்கள் அரங்கத்திற்கு வந்து புத்தகங்கள் வாங்கி செல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. தந்தை ‘பெரியாரின் பெண் ஏன் அடிமை ஆனாள்?’ என்ற புத்தகத்தை தேடி எடுத்து வாங்கி செல்கிறார்கள். அப்படி அங்கு வந்த நடுத்தர வயதுடைய ஒரு பெண் வெகு சரளமாக பேசிய கருத்துகள் மிகச் சிறப்பாக உள்ளன.
பெரியார் கொண்டாடப்பட வேண்டிய, போற்றப்பட வேண்டிய, பாதுகாக்கப்பட வேண்டிய தலைவர். இன்னைக்கு இருக்கிற இளைய சமுதாயம் மற்றும் மாணவர் சமூகம் மதம், இனம், மொழி அடிப்படையில் இன்னமும் தங்கள் சுதந்திரத்தை இழந்து நிற்கிறது. மறைமுகமான அடிமைத்தனத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
முடங்கி கிடக்கும் அந்த நிலை மாறனும் என்றால் தன்மானத்துடன், சுயமரியாதையுடன், பகுத்தறிவுடன் சுதந்திரமாக வாழ இளம் வயதிலேயே பெரியாரின் சிந்தனைகளை செலுத்த வேண்டும் என்று மிக அருமையாகக் கூறினார். பெண் குழந்தைகளைப் போற்றி பாதுகாக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பின் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் துன்பங்கள் பற்றி பேசிய ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டுமே என்று பலவித கருத்துக்களை ஆணித்தரமாக பேசுவதை இன்னைக்கு Periyar Vision OTT இல் பார்க்கலாம்.
– வி.எஸ்.கார்மேகம்
நங்கநல்லூர், சென்னை