புத்தகக் காட்சி அரங்கத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது மட்டுமல்லாமல் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன. பெரியார் சிந்தனை கொண்டவர்கள் பகுத்தறிவுவாதிகள் பலரும் பெரியார் புத்தக அரங்கத்திற்கு வராமல் செல்வதில்லை. அப்படி வந்தவர்களில் இளைஞர் ஒருவர் பெரியார் இல்லாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று பரபரப்பாக கூறிய கருத்துகள் சிந்திக்க வைக்க கூடியவை. தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகரமான அறிவுரை,
ஆழமான சிந்தனை உள்ள கருத்துகள், ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி, ஜாதி பேதம் இல்லாத சமூக சீர்திருத்தம், பெண் அடிமை ஒழிப்பு போன்றவற்றை நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் முற்போக்கு மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்டு பேசியும் எழுதியும் பரப்புரையும் செய்து வந்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. மதங்களும் அரசியலும் சாதிக்காதவற்றை பெரியார் தனி மனிதனாக சாதித்து காட்டி இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. மேலும் அவர் கூறிய சில கருத்துகளை தெரிந்து கொள்ள Periyar Vision OTT காணுங்கள்
– K.குணசேகரன்
அரியலூர்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com