பாட்னா, அக்.12 பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் துவங்கி உள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக (தே.ஜ.) கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தீர்க்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது.
முக்கியமாக, ஒன்றிய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பஸ்வான், தான் கேட்கும் குறிப்பிட்ட சில தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதம் காட்டுவதால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் (அய்.ஜ.த.) பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில், மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ. கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
பா.ஜ. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் அய்.ஜ.த., சிராக் பஸ்வா னின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட் ரீய லோக் சமதா ஆகிய கட்சிகள் அங்கம் வகிக் கின்றன.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பா.ஜ. மற்றும் அய்.ஜ.த. ஆகிய இரு கட்சிகளும் தலா 100 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், மீத முள்ள 43 தொகுதிகளில், சிராக் பஸ்வானுக்கு 20, ஜிதன் ராம் மஞ்சிக்கு 10, உபேந்திர குஷ்வாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனால் அதிருப்தி அடைந்த ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி, “தங்களுக்கு 15க்குக் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் தேர் தலில் போட்டியிட மாட் டோம். அதே சமயம், தே.ஜ. கூட்டணியை விட்டு விலக மாட்டோம்” என்று சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.