நெதன்யாகு, டிரம்ப் ஆதரவாளரான வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஆஸ்லோ, அக்.11-  ஒஸ்லோ 2025ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்ெகனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று (10.10.2025) அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் பரிசை அமைதிக்கான நோபல் தேர்வுக் குழு அறிவித்தது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர்கள். 94 பேர் நிறுவனங்கள்.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த அரசியல் வாதியான மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 8 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரி வந்தாலும்  டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கினால் சர்ச்சையாகும் என்ப தால் அவருக்கு வழங்கப் படவில்லை. எனினும், மரியா கொரினாவும் டிரம்ப், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு ஆகியோரை ஆதரிக்கக் கூடியவரே!

வெனிசுலாவுக்குள் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்பட உதவுபவராகவே மரியா அறியப்பட்டுள்ளார்.

ஹியூகோசாவேசுக்குப் பிறகு, வெனிசுலாவை ஆளும் அதிபர் நிகோலஸ் மதுரோவும், அமெரிக்க எதிர்ப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

எண்ணெய் வளமிக்க வெனிசுவேலாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது.

இந்த நோபல் பரிசும் அதற்கான முயற்சி என்றே உலக அரங்கில் கருதப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *