சென்னை, அக். 11- சென்னையில் அனைத்து ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கும் உயா்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவுள்ளதாக மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
சென்னை கொடுங் கையூா் குப்பை கொட்டும் வளாகத்தில் 128 கந்தல் சேகரிப்பாளா்களுக்கான புதுவாழ்வுத் திட்டத்தின் படி தனியாா் நிறுவனத்தில் தூய்மைப் பணி உள் ளிட்ட பணிகளுக்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் 8.10.2025 அன்று நடைபெற்றது. அதில் பணி உத்தரவுகளையும், அவா்களுக்கான பணி பாதுகாப்பு உடை உள்ளிட்டவற்றையும் வழங்கிய மேயா் ஆா்.பிரியா பின்னா் செய்தியா ளா்களிடம் கூறியதாவது:
நல உதவிகள்
சென்னை கொடுங்கை யூா் குப்பை கொட்டும் இடத்தில் கடந்த 3 தலைமுறைகளாக கந்தல் சேகரிக்கும் பணியில் குறிப்பிட்ட ஆயிரத்துக்கும் மேற் பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா். அவா் களில் 308 போ் தற் போது அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ஏற்கெ னவே பாதுகாப்பு உடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது அங்குள்ள 128 பேருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனியாா் தூய்மைப் பணி நிறுவனத்தில் பணி வாய்ப்பு அளிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் சம்பந்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதேபோல, பெருங்குடி குப்பை கொட்டும் இடத்தில் உள்ள கந்தல் சேகரிப்போருக்கும் பணி வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. அவா்களுக்கு பி. எஃப் பிடித்தம் உள்ளிட் டவையுடன், குழந்தைகள் மாநகராட்சிப் பள்ளிகளில் சோ்க்கப்பட்டு கல்வி பெறவுள்ளனா்.
ஊதியம் உயா்வு
சென்னையில் குறிப்பிட்ட மண்டல ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் முன்பைவிட உயா்த்தப்பட்டு மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து மண்டலங்களில் உள்ள ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கும் தினக்கூலியானது முன்பை விட உயா்த்தி வழங்கப்படவுள்ளது. தூய்மைப் பணியாளா் களுக்கான இலவச காலை உணவுத் திட்டம் விரைவில் தொடங்கவுள்ளது.
பருவமழை நடவடிக்கை:
மாநகரில் பருவமழைக் கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்ப ட்டுள் ளன.
டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள ப்பட்டுள் ளன.
மழையை எதிா்கொள் வதற்கு கடலோரக் காவல் படை உள்ளிட்ட பிற துறை களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுரு பரன், இணை ஆணை யா் (சுகாதாரம்) வீ.ப. ஜெயசீலன், நிலைக்குழுத் தலைவா் (சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி உள் ளிட்டோா் கலந்துகொண் டனா்.
நிகழ்ச்சிக்குப் பின்னா் தூய்மைப் பணியாளா்களுடன் மேயா் உள்ளிட்டோா் உணவருந்தினா்.