பொதுத்துறை வங்கிகளின் உயர்நிலை பதவிகளுக்கு தனியார் துறையினர் நியமனம் – பலத்த எதிர்ப்பு

புதுடில்லி, அக். 11- நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் நாட்டுப் பொருளாதாரத்தில், குறிப்பாக அடித்தள மக்களுக்கு நிதி உதவி உள்பட வங்கிச் சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளன. மொத்தம் 20 தனியார் வங்கிகள் 1969, 1980 ஆகிய காலக்கட்டங்களில் நாட்டுடைமை ஆக்கப்பட்டு வங்கிச் சேவைகளை வழங்கி வந்த நிலையில் 1991 முதல் நடைமுறைக்கு வந்த நிதித்துறை சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் அரசின் கட்டுப்பாடு தளரத் தொடங்கியது.

தனியார் மூலதனப் பங்கிற்கு வரவேற்புக் கம்பளம் விரிக்கப்பட்ட நிலையில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் முழுவதும் அரசு மூலதனத்தில் செயல்பட்டு வந்த நிலை மாறி பொதுத்துறை வங்கிகள் என அடையாளம் கண்டன. இதனால் அரசின் மூலதனப் பங்குகள் மொத்த மூலதனத்தில் 50 விழுக்காட்டிற்கும் குறையாமல் நீடித்து வந்தன. இருந்தாலும், அந்த வங்கிகளை தனியார் வயம் கொண்டு செல்வதில் ஒன்றிய அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

பொதுத்துறை வங்கிகளில் உயர்நிலைப் பதவிகளான, தலைவர் (Chairman), நிர்வாக இயக்குநர் (Managing Director), செயல் இயக்குநர் (Executive Director) ஆகிய பதவிகளுக்கு இதுவரை பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிந்தவர்கள்தான் தெரிவு செய்யப்பட்டு வந்தனர்.

இந்த வங்கிகளில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளை ஒருவரே வகிக்கும் வகையில் பதவிகள் இருந்தன. இதில் இரண்டு பொறுப்புகளையும் பிரித்து தலைவர் பதவிக்கு தனியார் துறை மற்றும் வங்கி சாராதவர்களை நியமித்து வந்தனர். மற்ற உயர்நிலை பதவிகளுக்கு பொதுத்துறை வங்கிகளைச் சர்ந்தவர்களை மட்டுமே இதுவரை நியமித்து வந்தனர்.

தற்பொழுது ஒவ்வொரு வங்கியிலும் மூன்று வகை உயர்நிலை பதவிகளுக்கு தனியார் துறையில் பணி புரிந்தவர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பொது மக்களுக்கான சேவையை படிப்படியாகக் குறைத்து, பணக்காரர்கள், காப்பரேட் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில் இவ்வாறு உயர்நிலைப் பதவிகளுக்கு தனியார் துறையினர் ஆட்களை நியமித்தால் பொதுத் துறை வங்கிகளின் சேவை மேலும் சீரழிவு அடையும் என்று வங்கியில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் சங்க அமைப்புகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கி நெறிமுறைச் சட்டங்களில் உரிய திருத்தங்களைக் கொண்டு வராமல் இப்படி உயர்நிலைப் பதவிகளுக்கு தனியார் துறையிலிருந்து ஆட்களை நியமிப்பது சட்டத்திற்குப் புறம்பானது எனும் விமர்சனம் வங்கி வட்டாரத்தில் பரவலாக நிலவுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *