கிராம உதவியாளர் பணியிடங்கள் 10 ஆம் வகுப்பு தகுதி

1 Min Read

சென்னை, அக்.3- தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற் கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை மாவட்ட வருவாய் அலகில் வட்டம் வாரியாக காலியாக உள்ள 20 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

கிராம உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

காலியிடங்களின் விபரம்

திருவொற்றியூர் – 4 மாதவரம் – 4

மதுரவாயல் – 2 எழும்பூர் – 1 ஆலந்தூர் – 5

சோழிங்கநல்லூர் – 4

கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 21 வயது நிரம்பிய வராகவும் 32 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழ்நாடு அரசு விதிகளின் படி பி.சி, எம்.பி.சி, பி.சி.எம், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் 42 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். ஊதியம்: ரூ. 11,100 – 35,100

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங் களுக்கு வாசித்தல் மற்றும் எழுத்துத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2025/09/17567143686664.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.10.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய https://chennai.nic.in/recruitment-of-village-assistant-post-2025/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *