சென்னை, அக்.3- ஒன்றிய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-2026 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act)-இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. மாண்பமை சென்னை உயர்நீதிமன் றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
சேமிப்புக் கணக்கில்
குறைந்தபட்ச தொகை
விதியை ரத்து செய்தது: அய்.ஓ.பி
சென்னை, அக்.3- சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரத்து செய்தது.
ஜன்தன் கணக்கு, ஊதியதாரர் கணக்கு போன்றவற்றுக்கு குறைந்த பட்ச வைப்புத் தொகை விதியில் இருந்து ஏற்கெனவே விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.