2.10.2025 இன்று காலை புலவர் சி.சங்கரலிங்கத்தின் துணைவியார் ஆசிரியை இரா.கலாவதி (வயது 69)சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்ற வந்த நிலையில் மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
தகவல் அறிந்ததும் சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, பொதுக்குழு உறுப்பினர் இரா.கலைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ், மதுராந்தகம், தி.மு.கழக ஊராட்சி மன்ற தலைவர் மு.வேல்முருகன், கோவிலாஞ்சேரி தி.மு.கழக நான்காவது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் கோ.நாகரெத்தினம், கோவிலிஞ்சேரி ராகேஷ் சர்மா நகர், பவானி நகர் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் த.குபேரன், வினோத்குமார், காசிராமன் மற்றும் மா.முருகையா ஆகியோர் உடனிருந்து ஆறுதல் கூறினர்.
4.10.2025 அன்று காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தோழர் கலாவதியின் உடல் உடற்கொடையாக வழங்கப்படுகிறது.