அரசுப் பணிகளில் 119 மாற்றுத் திறனாளிகள் அரசாணை வெளியீடு

சென்னை, அக்.1  அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் 119 பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில் கூறியிருப்பதாவது:அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பங்களிப்பை பெரிதும் உயர்த்தும் வகையிலும், அவர்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் 119 அரசு பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016இன் படி, “Persons with Benchmark Disabilities” எனப்படும் குறிப்பிட்ட விகிதத்தில் இயலாமை உள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க ஏற்றதாக கருதப்படும் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக, கனிமவளம், சட்டம், கூட்டுறவு, ஊராட்சி – நகராட்சி, போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சுற்றுலா, வேளாண், தகவல் தொழில்நுட்பம், உள்துறை, நிதி நிர்வாகம், சுகாதாரம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு, வீட்டுவசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இப்பணியிடங்கள் உள்ளன. இதில் மேலாளர் முதல் பாதுகாவலர் வரை பதவிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், குறைந்தபட்ச மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் (Benchmark Disability Certificate) பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என கருதப்படுகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *