இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் பொருளாதார வளர்ச்சியோ!
புதுடில்லி, அக்.1 அமெ ரிக்காவின் வரிவிதிப்பு, எச்-1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றும் (30.9.2025) இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 8-ஆவது நாளாக வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ‘சென் செக்ஸ்’ 97 புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து 267 புள்ளிகளில் வர்த் தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் ‘நிப்டி’ 23 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 611 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஆசியா மற்றும் பசிபிக் சார்ந்த நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக் கும் வங்கியாக ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளது. இந்தநிலையில் இந்த வங்கி, 2025-2026 நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.5 புள்ளிகளாக கணித்து வெளியிட்டது. மேலும் 2026-2027 நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.7 விழுக்காடாக இருக்கும் என்று கணித்திருந்தது. ஆனால் இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு, அன்னிய முதலீடுகள் தொடர் வெளி யேற்றம் காரணமாக வளர்ச்சி சரியும் என கணித்துள்ளது. 2026-2027ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5 விழுக்காடாக சரியும் என ஆசிய வங்கி கணித்துள்ளது.