நாடறிந்த பொருளாதார வல்லுநரும், அரசியல் விமர்சகருமான டாக்டர் பரகலா பிரபாகர், சென்னை பெரியார் திடலுக்கு இன்று (28.9.2025) வந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து கலந்துரையாடிச் சென்றார். இருவரும், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றிடும் வழிமுறைகள் குறித்தும், இளைஞர் சமுதாயத்திடம் நாட்டில் நடைபெறும் அரசியல் சீரழிவுகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினர். பெரியார் அருங்காட்சியகத்தினை டாக்டர் பரகலா பிரபாகர் அவர்களுக்கு சுற்றிக் காண்பித்து கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் விளக்கம் அளித்தார். இந்த சந்திப்பு உரையாடலின் பொழுது கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான இரா. விஜயசங்கர் மற்றும் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
(சென்னை – 28.9.2025)